in

நத்தத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு

நத்தத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1974ம் ஆண்டுகளில் 10-ம் வகுப்புகளில் படித்த 50 க்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 50 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் தங்களது மகன் மகள் பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தாருடன் வருகை தந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

இங்கு படித்த மாணவர்கள் பல்வேறு ஊர்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நேரில் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள் பின்னர் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளிக்கு 25 சிசிடிவி கேமரா அமைக்க தலைமையாசிரியர் கோரிக்கை விடுத்ததையடுத்து முன்னாள் மாணவர்கள் 25 கேமரா அமைக்க மொத்த தொகையையும் அளித்தனர். இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

செஞ்சி ஒன்றியம் ஊரணித் தாங்கள் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது