திருவிழாவில் பட்டாசு வெடிப்பது போன்று புதுச்சேரியில் வெடித்த டிரான்ஸ்பார்மர்
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் அனல் காற்றுடன் இருக்கமான சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் வெப்பநிலையும் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
இந்த நிலையில் வெப்ப அனலை சமாளிக்க பொதுமக்கள் ஏசி உள்ளிட்ட குளிர்சாதனங்களை பயன்படுத்தி வருவதால் புதுச்சேரியில் தொடர்ந்து மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.மேலும் அவ்வப்போது மின்சாதனங்கள் பழுதடைவதால் மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு சுழற்சி முறையில் புதுச்சேரி முழுவதும் மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் லாஸ்பேட்டையில் அதிக மின்னழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்து சிதறியது இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் சூழ்ந்தது.அதேபோல் புதுச்சேரி கடலூர் சாலை முதலியார் பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள மின் திடீரென டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி கொழுந்து விட்டு எறிந்தது.
திருவிழாவில் பட்டாசு வெடிப்பது போன்று தொடர்ச்சியாக 20 நிமிடம் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் அவ்வழியே சென்ற பாதசாரிகள் தலை தெரிக்க ஓடினர் இதனால் முதலியார் பேட்டையில் இருள் சூந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை டிரான்ஸ்பார்மர் கொழுந்து விட்டு எரிவதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ரசாயன கலவையை பீச்சு அடித்து டிரான்ஸ்பார்மரின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் திடீரென ட்ரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் முதலியார் பேட்டை பகுதி முழுவதுமே இருளில் மூழ்கியது.
புதுச்சேரியில் சில நேரங்களில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் உயர் மின்னழுத்தம் என்று மாறி மாறி வருவதால் பல்வேறு மின்மாற்றிகள் வெடித்து சிதறுவதாகவும், மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் பழுதடைந்தும் மின் மாற்றியில் உள்ள ஆயில்கள் மாற்றப்படாமல் இருப்பதாலும் டிரான்ஸ்பார்மர் வெடிப்பதற்கு காரணங்கள் என்றும் தெரியவந்துள்ளது.
எனவே மின் துறை அதிகாரிகள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி பழைய நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை மாற்றி புதியதாக பொருத்தி ஆயிலையும் மாற்றி சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…