ஜனனிஸ்ரீ பதிப்பகம் மற்றும் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய முப்பெரு விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு பாவலர் மு. விஜய சாமுண்டீஸ்வரி எழுதிய கவிதை நூல்களை வெளியிட்டு 50 அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்
ஜனனிஸ்ரீ பதிப்பகம் மற்றும் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய முப்பெரு விழா புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாவலர் மு. விஜய சமுண்டீஸ்வரி எழுதிய புறநாநூற்றுப் புதுமை ,பாடும் பறவையே பாடு ,ஆத்தி சூடி அருமருந்து, ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்ப்பட்டறை புதுச்சேரி கிளை இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் இரா. காந்தியப்பன் வரவேற்க தமிழ் பட்டறை நிறுவனத் தலைவர் சேக்கிழார் அப்பாசாமி தலைமை தாங்கினார்
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார்.
இந்த நூல்களை அண்ணா பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் தமிழியலன் தமிழ் பட்டறை நிறுவனத் தலைவர் சேக்கிழார் அப்பாசாமி கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் சென்ட்ரல் நோட்டரி குமாரவேல், சத்திய கலா, மற்றும் உமாமகேஸ்வரி, மணிகண்டன், ராஜலட்சுமி, ரமேஷ், லாவண்யா, ராஜா, அனிதா, முருகானந்த், சர்வந்தினி ஆகியோர் பெற்று கொண்டனர்.
தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள் ,கவிஞர்கள் ,மற்றும் சேவையாளர்கள் என ஐம்பது அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். இதில் பேராசிரியர் முனைவர் இளங்கோ கலைமாமணி சீனு. வேணுகோபால் நூல் ஆய்வு செய்தனர் இதனை அடுத்து நூல் ஆசிரியர் பாவலர். விஜய சாமுண்டீஸ்வரிக்கு ஔவையார் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து தொல்காப்பிய விருது முனைவர் இளங்கோ தமிழ்மாமணி இலக்கியன்
தமிழ்மாமணி துரைமாலிறையன் தமிழ்மாமணி பூங்கொடி பராங்குசம் முனைவர் தமிழியலன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலைமாமணி சீனு வேணுகோபால் பொறிஞர் இரா தேவதாசு கலைமாமணி கோ பாரதி கவிமாமணி கட்டிக்குளம் ஓ சுந்தரமூர்த்தி கலைமாமணி கோவிந்தராசு கலைமாமணி முனைவர் நெய்தல் நாடன்
பாவலர் தமிழ்நெஞ்சன் தமிழ்திரு அறிவன் மருத்துவர் கலைவேந்தன்
பாவலர் பாரதிவாணர் சிவா அசோகா சுப்பிர மணியன் பாவலர் செந்தில் குமார்
முனைவர் க. கண்ணன் முனைவர் சொ.ஏழுமலை முனைவர் கோ . குணசேகர்
மற்றும் பலரு இலக்கிய செம்மல் விருது வழங்கப்பட்டது.
சரஸ்வதி இராமலிங்கம், ராமாயி (எ) உமாதேவி, முத்துவேல் பிரண்ட்ஸ் ராமு ஆகியோருக்கே சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.
விழாவில் பாவலர் மு. விஜயசாமுண்டீஸ்வரி ஏற்புரை வழங்க பதிப்பகத்தார் இரா. ஜனார்த்தனன் நன்றி வரை கூறினார் விழாவில் ராதாகிருஷ்ணன்,குழந்தைசாமி விஜயலட்சுமி, விஜயகுமாரி, பரிமளா ஆனந்த நாதன், அன்பரசன் செல்வரசி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் தமிழ் அறிஞர்கள் கவிஞர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.