in

தொட்டியம் அருகே வாழைத்தார் லோடு ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து


Watch – YouTube Click

தொட்டியம் அருகே வாழைத்தார் லோடு ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

திருச்சிமாவட்டம்தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் மஞ்சமேடு, ஸ்ரீராம சமுத்திரம், சின்னபள்ளிபாளையம், பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினசரி வாழை தார்கள் சத்தியமங்கலம் பெங்களூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (28) என்பவர் வாழைத்தார் லோடு ஏற்றுவதற்காக வேனை ஓட்டி வந்துள்ளார்.

பின்னர் காட்டுப்புத்தூர் பகுதியில் வாழைத்தாறுகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு பகுதியில் லோடு ஏற்றுவதற்காக கூலிதொழிலாளர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது காட்டுப்புத்தூர் அருகே மாவலிபட்டியில் சாலையோர வலைவில் சென்றபோது எதிரே அரசு பேருந்து வந்ததால் எதிர்பாராத விதமாக வாழைத்தார் லோடு ஏற்றி வந்த வேன் அருகில் இருந்த மின் கம்பத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மின் கம்பம் உடைந்து போனது. இதனால் மின் கம்பிகள் அறுந்தது. உடனடியாக மின்சாரம் தடைபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அலுவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து மின் கம்பத்தை சீரமைத்தனர்.

விபத்துக்குள்ளான வேன் ஜேசிபி எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. கூலிதொழிலாளர்கள் வேனில் பின்னால் அமர்ந்து சென்றதால் வேன் கவிழ்ந்த போது அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர். சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தமிழகத்தின் நீராதார உரிமைகள் பறிபோவதை தமிழக முதல்வர் வேடிக்கை பார்க்கிறார்

அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்காததால் பொதுமக்கள் பெரும் அவதி