in

கடல் சீற்றம் குறைவால் கரை பகுதிக்கு படையெடுக்கும் விதவிதமான மீன்கள்

கடல் சீற்றம் குறைவால் கரை பகுதிக்கு படையெடுக்கும் விதவிதமான மீன்கள்

 

கடல் சீற்றம் குறைவால் கரை பகுதிக்கு படையெடுக்கும் விதவிதமான மீன்கள். அருந்து கிடந்த மீனவர் வளையில் சிக்கித் தவிப்பு. ஆழ் கடல் நீச்சல் வீரர் வலைகளை அப்புறப்படுத்தி மீன்களை சுதந்திரமாக நீந்துவதற்கு வழி வகுத்த காட்சிகள்.

ஆழ்கடல் நீச்சல் பயிற்சி் வீரர் அரவிந்த். இவர் புதுச்சேரி மற்றும் சென்னையில் டெம்பிள் அட்வென்ச்சர் என்ற பெயரில் ஸ்கூபா டைவிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தனது குழுவினருடன் அவ்வப்போது புதுச்சேரி, சென்னை நீலாங்கரை, மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் ஆழ்கடலில் சென்று பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

அது மட்டுமில்லாமல் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் புதிய வகை மீன்கள், கால சூழ்நிலைக்கு ஏற்ப கடற்கரை கரை ஓரங்களில் வரும் மீன்களை படம்பிடித்து வருகிறார். மேலும் ஆழ்கடலில் அதிக அளவில் குப்பைகள் சேருவதை தடுத்து அதனை அப்புறப்படுத்தும் முயற்சியும் இவர்களது குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் இருந்து புதுச்சேரி கடற் பகுதி வரை ஆழ் கடலுக்குள் சென்ற இவர்களது குழுவில் ஒருவர் கடல் சீற்றமில்லாமல் அமைதியான நிலையில் இருந்ததன் காரணமாக சிறு மீன்கள் முதல் பெரிய அளவில் மீன்கள் வரை கரையோர பகுதிகளுக்கு மீன்கள் படையெடுத்து வந்துள்ளது.

அப்பொழுது மீனவர்கள் மீன்பிடிக்கும் பொழுது அறுந்து விழுந்த வலையில் சிக்கித் தவித்ததை பார்த்த வீரர், அந்த வலையை லாபகமாக அப்புறப்படுத்தி மீன்களை சுதந்திரமாக கடலில் நீந்துவதற்காக வழியை ஏற்படுத்தினார்.. மேலும் அப்பகுதியில் அறுந்து கிடந்த வலைகளையும் குப்பைகளை அப்புறப்படுத்தி கரைக்கு எடுத்து வந்தனர்…

What do you think?

மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் உயர்த்தி வழங்கப்படும் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தகவல்