in

நாகையில் நான்கு வயது குழந்தை மழலை குரலில் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம், பாடும் வீடியோ வைரல்

நாகையில் நான்கு வயது குழந்தை மழலை குரலில் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம், பாடும் வீடியோ வைரல்: அங்கன்வாடி பணியாளருக்கு குவியும் பாராட்டு

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகராட்சி பகுதிகளில் பழமை வாய்ந்த நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது அதன் வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கோஷாப்பள்ளி என்ற அங்கன்வாடி குழந்தைகள் மையம் இயங்கி வருகிறது இங்கு நாளொன்றுக்கு 15 குழந்தைகள் பயின்று வருகின்றன தினசரி குழந்தைகளை அங்கன்வாடி உதவியாளர் கவிதா வீடு வீடாக சென்று குழந்தைகளை மையத்திற்கு அழைத்து வருவார் அங்கன்வாடி பணியாளர் சுகாசினி குழந்தைகளுக்கு பாடத்தை கற்பித்து ஊக்கப்படுத்தி வருகிறார் இந்த நிலையில் மையத்தில் முகமது அல்மீர் என்ற நான்கு வயது குழந்தை அங்கன்வாடி மைய பாடத்தில் உள்ள பாடல்கள் மற்றும் தேசிய கீதம் , தமிழ்த்தாய் வாழ்த்து, நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள மினாராக்களின் பெயர் மற்றும் பாடல்களை என அனைத்தையும் தன்னுடைய மழலை குரலில் பாடியது அனைவரையும் கவர்ந்து உள்ளது எனவே அங்கன்வாடி மைய பணியாளர் தன்னுடைய தொலைபேசியில் முகமது அல்மீர் பாடிய பாடலை வீடியோவாக பதிவு செய்து பெற்றோர்களுக்கு அனுப்பி உள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுமக்கள் மழலை குரலில் பாடும் குழந்தையை ரசிப்பது மட்டுமின்றி சிறப்பாக அங்கன்வாடி மையத்தை வழிநடத்தி குழந்தைகளை ஊக்கப்படுத்திய அங்கன்வாடி பணியாளரையும் பாராட்டி வருகின்றனர்.

What do you think?

நாகையில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோலார் மின் கம்பத்தில் பேட்டரி, திருடிய வாலிபர் கைது