in

விஞ்ஞான உலகில அடிப்படை வசதிகளே இல்லாத கிராமம்… மக்கள் அவதி…

விஞ்ஞான உலகில அடிப்படை வசதிகளே இல்லாத கிராமம்…
மக்கள் அவதி…

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தளிர்மருங்கூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அமரன்வயல் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு திருவாடானையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் இருந்து கீழ்குடி வழியாக சாலை பிரிந்து செல்கிறது.

கடந்த 25 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறிவிட்டது எனவும் அவசர காலத்தில் ஆட்டோ கூட வர மறுப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.

மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விவசாயம் செய்து அறுவடை செய்த நெல்லை கூட ஏற்ற வருவதற்கு வாகனங்கள் வருவதில்லை.

குடிதண்ணீர் இல்லை. மின்சார வசதி கூட சரியாக இல்லை இப்படி அடிப்படை வசதிகளே இல்லாமல் பெறும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் இந்த சாலை செக்கத்திடல், குணவதி மங்கலம் வழியாக திருவெற்றியூர் வரை செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

பலமுறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தொடர்ந்து இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக கவலை தெரிவித்தனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க  வேண்டும் இப்பகுதி ,மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

மழையால் பள்ளமான சாலை அச்சத்தில் வாகன ஓட்டிகள் உறக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை

சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவாக தீர்த்த வாரி நடைபெற்றது