ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுவர் இடிந்து விழுந்தது
ராஜபாளையம் அருகே கிழவி குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்து மாத்திரை வாங்கும் அறையில் அறையில் திடீரென மேற்கூரை உடைந்து விழுந்து. ஓரமாக அமர்ந்திருந்த மருந்தாளுனர் உயிர் தப்பியது. அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுவர் இடிந்து நிலையில் உள்ளதால் உள் நோயாளிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்
ராஜபாளையம் அருகே கிழவிகுளம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை சுற்று வட்டாரத்தில் உள்ள சங்கர லிங்கபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினந்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சித்த மருத்துவ பிரிவும் செயல்பட்டு வரும் நிலையில், பிரசவங்களும் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த மருத்துவமனையின் பிரதான கட்டடம் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாகி விட்டதால் பல்வேறு பகுதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக வாயிலின் மேற்கூரை கடந்த சில மாதங்களுக்கு முன் உடைந்து விழுந்து விட்டது. கட்டடத்தின் உள் பகுதியில் பல்வேறு இடங்களில் மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ளது.
இந்த நிலையில் பணி மருத்துவர்கள் ராஜலட்சுமி, பாரதி மாரீஸ்வரன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இறுதி நேரமாதலால் 20 நோயாளிகள் மட்டுமே இருந்தனர். மருந்தாளுனர் மகாலிங்கம் மாத்திரை வழங்கி வந்தார்.
அந்த சமயம் மாத்திரை வழங்கும் அறையின் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்துள்ளது. அப்போது அறையினுள் ஓரமாக அமர்ந்திருந்த மருந்தாளுனர் நூலிழையில் உயிர் தப்பினார். அவரை தவிர யாரும் அந்த அறையில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
உடனடியாக அந்த பகுதியில் இருந்த அனைவரும் அங்கிருந்த அகன்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால், சேமதடைந்த நிலையில் இருப்பதாக அப் பகுதி மக்கள் புகார் தெரவித்துள்ளனர்.