in

கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் மகா பைரவேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் மகா பைரவேஸ்வரர் திருக்கோயிலில் மகா பைரவேஸ்வரருக்கும், மகா பைரவேஸ்வரிக்கும் இன்றிரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது .

கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தில், பழம் பெருமை வாய்ந்த பைரவேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது, இப்பூவுலகில் முதலில் பைரவர் தோன்றி தலமாக போற்றப்படும் இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, இன்றிரவு மகா பைரவேஸ்வரருக்கும், மகா பைரவேஸ்வரியான மகா பைரவிக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது

முன்னதாக நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, மாலை மாற்றும் நிகழ்வும், தொடர்ந்து கங்கனம் கட்டுதல், புணுல் அணிவித்தல், நலுங்கு வைத்தல், பட்டு வஸ்திரங்கள் சமர்பித்தல், சீர்வரிசை தட்டுக்கள் சமர்பித்தல் ஆகியவை நடைபெற்ற பின்னர், புனிதநீர் கடத்தை ஸ்தாபித்து, சிவச்சாரியார்கள் ஹோமம் வளர்த்து, வேத மந்திரங்கள் ஜபித்து, பைரவி கழுத்தில் திருமாங்கல்யம் பூட்ட, பைரவேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

What do you think?

கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் சொர்ணாகர்ஷண பைரவர், திருக்கோவில் கார்த்திகை மாதம் காலபைரவர் ஜெயந்தி

ஜப்பானில் கிளி ஜோசியம் பார்த்து மொக்கை வாங்கிய இர்பான்