in

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் பக்தர் 140 கி மீ பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு சுவாமி தரிசனம்


Watch – YouTube Click

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் பக்தர் 140 கி மீ பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு சுவாமி தரிசனம்

 

பழனி கோயிலுக்கு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் பக்தர் கேரள மாநிலம், மூணாற்றில் இருந்து 140 கி.மீ. பாதயாத்திரையாக வந்து கிரிவல பாதையில் பாட்டு பாடியபடி சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா (47) கேரள மாநிலம் மூணாற்றிலிருந்து பாத யாத்திரையாக வந்து திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்தார்.

முருகப் பெருமானை வேண்டி மாலை அணிந்தும், புடவை அணிந்தும் வந்திருந்த அவர் கேரள மாநிலம், மூணாற்றைச் சேர்ந்த பக்தர்கள் குழுவுடன் வந்ததாகத் தெரிவித்தார்.

கடந்த 15-ஆம் தேதி பாத யாத்திரையாகப் புறப்பட்ட குழுவினர் 16-ஆம் தேதி உடுமலை அமராவதி வழியாக பழனி சண்முக நதி வந்தனர்.

இங்கு புனித நீராடி விட்டு, பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு திருஆவினன்குடி வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, மூணாறுக்கு சுற்றுலா வந்தபோது பாதயாத்திரை பற்றி தெரியவந்ததாகவும், அங்குள்ள பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் போது அவர்களு டன் சேர்ந்து இந்த முறை மாலையணிந்து வந்ததாகவும் மரியா தெரிவித்தார்.

இவர்கள் ஞாயிற்றுக்கிழமையான கிரிவல பாதையில் பாதயாத்திரை பக்தர்களுடன் ஆடி பாடி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு மினி மரத்தான் போட்டி

குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் திடீர் உயிர் இழப்பு