in

தோசைத் திருப்பியை எடுப்பதற்கு கையை வைத்து பாம்பின் வாலை பிடித்து இழுத்த பெண்


Watch – YouTube Click

தோசைத் திருப்பியை எடுப்பதற்கு கையை வைத்து பாம்பின் வாலை பிடித்து இழுத்த பெண் பதட்டத்தில் மயக்கம் அக்கம் பக்கத்தினரிடையே பரபரப்பு

பண்ருட்டி அருகே முத்து நாராயணபுரம் மெயின்ரோட்டில் வசிக்கும் அமுதா தனது பிள்ளைகளுக்கு காலை உணவாக தோசை சுடுவதற்கு கல்லை அடுப்பில் வைத்துவிட்டு தோசைத் திருப்பியை எடுக்க கையை வைத்தபோது பாம்பின் வால் கையில் அகப்பட்டதால் கதறிய அமுதா பதட்டத்தில் மயக்கம். பிள்ளைகள் அலறியதில் அக்கம் பக்கத்தினர் கூட்டம் சேர்ந்தனர்.

அண்டை வீட்டார்கள் அமுதாவுக்கு முதலுதவி செய்ய அமுதா கண்விழித்து நடந்ததை கூற அருகில் இருந்த நபர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த வன ஆர்வலர் பாம்பு பிடி வீரர் சவுத் ஸ்டார் உமர் அலி (+91 9786472901) அவர்களுக்கு காலை 11.00 மணிக்கு தகவல் தெரிவித்ததனடிப்படையில் சம்பவ இடத்திற்கு 11.30 க்கு விரைந்து வந்து அருகில் வைத்திருந்த பாத்திரங்கள் மற்றும் பலகைகள் கோழிக்கூண்டு இவைகளில் 15 நிமிடங்களாக தேடியதில் 5 அடி நீளமுள்ள பெரிய நல்ல பாம்பானது இரண்டு கோழிக்குஞ்சுகள் மற்றும் இரண்டு கோழிமுட்டைகளை இரையாக விழுங்கி பதுங்கியிருந்ததபோது இலாவகமாக பிடிபட்டது. வீட்டாருக்கு சுற்றுபுறம் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

மணப்பாறையில் அனைவரின் கவனம் ஈர்த்த தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தாஜ்மஹால்

கடலூர் மாவட்டத்தில் திரு அண்ணாமலை திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்