in

முசிறி அருகே ஏவூர் பகுதியில் ஆட்டோவும் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் பலி 9 பேர் காயம்

முசிறி அருகே ஏவூர் பகுதியில் ஆட்டோவும் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் பலி 9 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் அலீமா பீவி .இவர் அய்யம்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டில் மீனைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு லால்குடிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

ஆட்டோவை அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ருக்மணி (54) என்கிற பெண் ஓட்டி சென்றுள்ளார்.திருச்சி நாமக்கல் சாலையில் ஏவூர் கருப்பு கோவில் அருகே ஆட்டோ சென்றபோது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியது இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது

ஆட்டோவில் மோதிய பேருந்து சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டிய சென்ற ருக்மணி படுக்காயமடைந்தார். முசிறிஅரசு மருத்துவமனையில் ருக்மணி சேர்க்க பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி பலியானார்.மேலும் ஆட்டோவில் வந்த அலிமா பீவி பேருந்தில் பயணம் செய்த சேலம் விஜயலட்சுமி, மண்ணச்சநல்லூர் சொர்ணம்,சோமரசம்பேட்டை சரோஜா, தர்ஷினி, பைத்தம்பாறை சித்ரா, காளிப்பட்டி சேகர், செவந்தலிங்கபுரம் செல்வி மற்றும் மண்ணச்சநல்லூர் ஜானகி உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்

காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அலிமா பீவி , மண்ணச்சநல்லூர் சொர்ணம் , காளிப்பட்டியைச் சேர்ந்த கண்டக்டர் சேகர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6 நபர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுசென்றனர்

சம்பவம் குறித்து முசிறி காவல் ஆய்வாளர் செல்லத்துரை, எஸ் ஐ பிரகாஷ் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்…

What do you think?

திருச்சியில் சாலையில் தவித்த தடை செய்யப்பட்ட ரக நாய்

வருவாய் மாவட்ட அளவிலான 30 – கிலோமீட்டர் தூரம் கொண்ட விரைவு சைக்கிள் ஓட்டபந்தயம்..