in

அமெரிக்க பேரணியில் துப்பாக்கி சூடு ஒரு பெண் பலி பலர் கவலைக்கிடம்


Watch – YouTube Click

அமெரிக்க பேரணியில் துப்பாக்கி சூடு ஒரு பெண் பலி பலர் கவலைக்கிடம்

அமெரிக்கா மிசோரியின் கன்சாஸ் நகரில் பேஸ் பால் உள்ளூர் விளையாட்டு தொடரில் வெற்றிபெற்ற கன்சாஸ் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெற்றி பேரணியை புதன் கிழமை நடத்தினர். அந்த பேரணியின் போது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்

.பேரணியில் திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்த துப்பாக்கி சூட்டில் டிஜேயாக வேலை செய்து வந்த லிசா லோபஸ்-கால்வன் என் பெண் பரிதமாக உயிரிழந்தார்.

அமெரிக்க பேரணியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்பு படையை சேர்ந்த ரோஸ் க்ரண்டிசன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறிய கூற்றுப்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களில் மிக ஆபத்தான காயங்களுடன் 8 பேரும், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் 7 பேரும் என பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

மிசோரியின் கன்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக இதுவரை மூன்று நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என கன்சாஸ் நகர காவல்துறைத் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன.


Watch – YouTube Click

What do you think?

பள்ளி அருகே உள்ள கடைகளில் டிஎஸ்பி திடீர் ஆய்வு

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ரயில் மறியல்