வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம் காயமடைந்து சாலையில் கடந்த பெண்ணிற்கு ஓடிவந்து முதல் உதவி செய்த மருத்துவரின் நெகிழ்ச்சியான செயல்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பெரியகுளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம் அடைந்தார் காயம் அடைந்து சாலையில் கிடந்த பெண்ணிற்கு அவ்வழியே வந்த மருத்துவர் ஒருவர் முதலுதவி செய்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் காய்கறி கடை வைத்திருப்பவர் பாலமுருகன் தேனி மாவட்டம் கானா விளக்கு அரசு மருத்துவமனை உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் தனது குடும்பத்துடன் மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி உள்ளார் திண்டுக்கல் சாலையில் பரசுராமபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது பாலமுருகன் மனைவி மணிமேகலை அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சக்கரத்தில் சிக்கியது இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் மணிமேகலை சாலையில் தூக்கி வீசப்பட்டார் இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிமேகலை உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல மருத்துவர் செல்வராஜ் தனது காரை நிறுத்தச் சொல்லி உடனடியாக ஓடி வந்து சாலையில் மயங்கி கிடந்த மணிமேகலைக்கு முதல் உதவி செய்தார்
108 ஆம்புலன்ஸ் வரும் வரை அவர் அருகில் இருந்து கவனித்துக் கொண்ட மருத்துவர் செல்வராஜ் மணிமேகலையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் தன் பணிக்குச் சென்றார் மருத்துவரின் இச்செயல் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது
வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் மணிமேகலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.