in

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடனுதவி விண்ணப்பிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடனுதவி விண்ணப்பிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடனுதவி விண்ணப்பிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு: பெண் போலீசார் மீட்டு முதலுதவி சிகிச்சை.

நாகை அருகே வடகுடி பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 55) மாற்றுத்திறனாளி. இவர் தனது தங்கையுடன் கடனுதவிக்கு விண்ணப்பிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வந்தார்.

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் படி ஏறியபோது தனலெட்சுமி திடீரென மயக்கி விழுந்தார். இதபார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார், தனலெட்சுமி மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதனால் மிக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது நீண்ட நேரத்துக்கு பின்னர் மயக்கம் தெளிந்த தனலெட்சுமி தனக்கு அடிக்கடி இதுபோல் மயக்கம் நிலை ஏற்படும் என தெரிவித்த தொடர்ந்து அவர் தங்கையின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் நல துறை அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பெண் போலீசாரின் செயலை அங்குள்ள பொதுமக்கள் பாராட்டினார்.

What do you think?

புதிய பேருந்து நிலையம் செல்லூர் கிராமத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

மூன்றரை வயது குழந்தை மழலை குரலில் திருப்புகழ் பாடும் வீடியோ