புவனகிரியை சேர்ந்த பல் மருத்துவம் படித்த இளைஞர் சாலை விபத்தில் மூளைச்சாவு
இளைஞர் உடல் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு சார்பில் அரசு மரியாதை செய்யப்பட்டது
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த பல் மருத்துவம் படிக்கும் இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்தார் அவரது உடல் தானமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து அரசு சார்பில் அரசு மரியாதை செய்யப்பட்டது
புவனகிரியை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளைஞர் சரண் என்பவர் பாண்டிச்சேரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவ படிப்பு பயின்று வந்துள்ளார் இந்நிலையில் விடுமுறைக்கு பாண்டிச்சேரியில் இருந்து புவனகிரி வந்துள்ள அவர் கடந்த 13 -2-2025 அன்று அரசு பேருந்தில் இரவு 7:30 மணியளவில் புவனகிரியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்தில் படியில் பயணம் செய்துள்ளார் பேருந்து மணலூர் பகுதியில் வேகத்தடை யில் ஏறி இறங்கிய போது படியில் பயணம் செய்த சரண் தவறி சாலையில் விழுந்து பின் புற தலையில் பலத்த அடிபட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்துள்ளார்
இந்நிலையில் சரண் பெற்றோர்கள் ஒப்புதலோடு சரண் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது இந்நிலையில் உடல் தானம் செய்த சரண் உடலுக்கு அரசு மரியாதை தரும் விதமாக சிதம்பரம் சார் ஆட்சியர் (பொறுப்பு) சந்திரசேகர் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் புவனகிரி வட்டாட்சியர் தனபதி புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி சிதம்பரம் தாலுக்கா காவல் ஆய்வாளர் அமுதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சரண் உடலுக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினர்