in

சிதம்பரம் அருகே பழைய விலையில் ஜேசிபி எந்திரம் வாங்கிய இளைஞர். பெயர் மாற்றம் செய்ய முடியாததால் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சிதம்பரம் அருகே பழைய விலையில் ஜேசிபி எந்திரம் வாங்கிய இளைஞர். பெயர் மாற்றம் செய்ய முடியாததால் அவதி. மாறி, மாறி அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு. உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பெரியப்பட்டு பகுதியில் உள்ள சுதாகர் என்பவரிடம் ஜேசிபி எந்திரம் ஒன்றை பழைய விலையில் வாங்கி உள்ளார். இதற்காக சுமார் 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு, எஞ்சிய ரூ 15 லட்சத்தை தனியார் வங்கியில் கடனாக பெற்று கொடுத்திருந்தார்.

பின்னர் ராமச்சந்திரன் பெயர் மாற்றம் செய்ய சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு ஆவணங்களை பரிசோதனை செய்த அலுவலர்கள் ஜேசிபி எந்திரம் சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள ஒருவர் பெயரில் இருப்பதாகவும், அதனால் இங்கு பெயர் மாற்றம் செய்ய முடியாது எனவும் கூறி, கே.கே.நகருக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து ராமச்சந்திரன், ஜேசிபி எந்திரத்தின் முதல் உரிமையாளரான சுதாகர் உள்ளிட்டோருடன் கே.கே நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், ஏதாவது தவறு நடந்திருக்கும். அதை பார்த்து சரி செய்து தருகிறோம் என தெரிவித்துள்ளனர். பின்னர் மீண்டும் சென்று விசாரித்தபோது திருச்சியில் ஒருவரின் பெயரில் பதிவு இருப்பதாக அலுவலர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் திருச்சிக்கு சென்றனர். ஆனால் அங்கு சென்ற பிறகு மீண்டும் கே.கே நகருக்கே செல்லுங்கள் எனக்கூறி அலைக்கழித்துள்ளனர். ஜேசிபி எந்திரத்தை பெயர் மாற்றம் செய்ய முடியாமல் ராமச்சந்திரன் தவித்து வந்த நிலையில், பின்னர் கடன் கொடுத்த தனியார் வங்கி ஊழியருடன் மீண்டும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலரை சந்தித்தார்.

அதன் பேரில் வட்டார போக்குவரத்து அருணாச்சலம் கே.கே. நகரில் உள்ள அலுவலகத்திற்கு பேசி அதை சரி செய்யுமாறு கூறியுள்ளார். இதுபற்றி கூறிய ராமச்சந்திரன்.

ஜேசிபி எந்திரம் வாங்குவதற்காக 21 லட்சம் ரூபாய் பேசி 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு மீதியை தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் கடனாக பெற்று கொடுத்தேன். இதற்கான ஆவணங்களை சரி செய்து எனது மனைவி பெயரில் பெயர் மாற்றம் செய்வதற்காக சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது அங்கு அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்துவிட்டு இது சென்னை கே.கே.நகரில் உள்ள ஒருவர் பெயரில் இருப்பதாக கூறினார். பின்னர் கே.கே. நகர் சென்று கேட்டபோது, ஏதாவது குளறுபடி ஏற்பட்டிருக்கும் சரி செய்து தருகிறோம் என கூறினார்கள்.

அதன் பிறகு திருச்சியில் ஒருவர் பெயரில் இருப்பதாக கூறியதை எடுத்து அங்கும் சென்று பார்த்தோம். ஆனால் அவர்கள் மீண்டும் கே.கே. நகருக்கு செல்லுமாறு கூறினர் இவ்வாறு மாறி, மாறி அலைகழிப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை எனக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.

தனியார் நிதி நிறுவன ஊழியர் கூறுகையில், ராமச்சந்திரன் முதலில் கடன் கேட்டு விண்ணப்பித்தார். அதனால் முதல் ஓனரான சுதாகர் என்பவருக்கு காசோலை கொடுத்து விட்டோம். பின்னர் பெயர் மாற்றம் செய்ய வந்தபோது கே.கே. நகருக்கும், திருச்சிக்கும் அலைக்கழிக்கிறார்கள். இதில் எங்கே தவறு நடந்திருக்கிறது என்று தெரியவில்லை. அதனால் இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்தான் தீர்வு காண வேண்டும் என்றார்.

What do you think?

புவனகிரி ஸ்ரீ வெள்ளியம்பலம் ஆலயத்தில் மஹா கால பைரவர் அஷ்டமி பூஜை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வல்லம்படுகையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு