விசிக துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுன் நியமனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அம்பேத்கர் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு நடைபெற்றது.
கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கூட்டமானது நடைபெற்றது. இதன் போது ஆதவ் அர்ஜுன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார், இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் ஆதவ் அர்ஜுன் உள்ளார்.
இது குறித்த திருமாவளவனின் எக்ஸ் தள பதிவில், “இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
உயர்நிலைக் குழு கூட்டத்தில் ரவிக்குமார் எம்.பி, வன்னி அரசு, ஷானவாஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.