in

திருமங்கலக்குடியில் உள்ள அருள்மிகு புத்துமாரியம்மன், ஆலயத்தில் ஆடி திருவிழா

கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் உள்ள அருள்மிகு புத்துமாரியம்மன், ஆலயத்தில் ஆடி திருவிழா முன்னிட்டு பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருமங்கலக்குடி காட்டுக்குளம் அருள்மிகு புத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 17ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

18 ஆம் தேதி உலக நன்மைக்காக விவசாயம் செழிக்க குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று காவிரி ஆற்றில் இருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரை, பால்குடம், காவடி, அழகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக நாளை தீமிதி திருவிழாவும் அதன் தொடர்ந்து அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. 22 ஆம் தேதி விடையற்றல் கூடிய உதிர பழி பெருவிழா மற்றும் கலை நிகழ்ச்சியுடன் இவ்வாண்டுக்கான ஆடித்திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் இளைஞர்கள் கிராமவாசிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்

What do you think?

செஞ்சி போத்துவாய் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

அரசு பேருந்துகள் இயக்கப்படுவதுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்பட்டு வருவதாக நெல்லையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.