in ,

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை

 

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை 108 பெண்கள் பங்கேற்று மனம் உருகி வேண்டி பூஜை செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருகோயிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருகோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.

மேலும் உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர் மாலை 6 மணியளவில் உற்சவ அம்மனுக்கு பம்பை மேளதாளம் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து விளக்கு  பூஜையில் ஈடுபட்டனர் .

பெண்கள் மனம் உருகி பிரார்த்தனை செய்தனர் இதனை தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் கோவில் அறங்காவலர்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

What do you think?

நாமக்கல் காளியம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடி பெளர்ணமி திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநயினார்- கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித்தபசுக்காட்சி சிறப்பாக நடைபெற்றது