in ,

நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவிலில் ஆடி நவராத்திரி விழா இலட்சார்னை பெரு விழா

நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவிலில் ஆடி நவராத்திரி விழா இலட்சார்னை பெரு விழா

 

நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவிலில் ஆடி நவராத்திரி விழாவை முன்னிட்டு இலட்சார்னை பெரு விழா!

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை எம்.ஜி.ஆர். நகரில் தங்காயி மற்றும் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பத்து வருடங்களாக வருடந்தோறும் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் ஆடி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு விழா, கடந்த 20-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நாமக்கல் ஸ்ரீ தங்காயி அம்மன் மற்றும் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பதினொன்றாம் ஆண்டாக நேற்று திங்கட்கிழமை காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் நவராத்திரி திருவிழா ஆரம்பம் ஆனது, இன்று செவ்வாய்க்கிழமை இலட்சார்னை நடைப்பெற்றது.

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற வியாழக்கிழமை (ஜூலை 25) தேய்பிறை பஞ்சமி அன்று ஸ்ரீலஸ்ரீ மாதாஜி தலைமையில் ஹோமம் மற்றும் ஸஹஸ்ரநாமம், நவாவர்ணம் மற்றும் வாராஹி பூஜை நடைபெறும்.

ஏற்பாடுகளை ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் சித்தர்பீட பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

What do you think?

அன்புமணி ராமதாஸ் பிற்போக்குத்தனமாக பேசுகிறார்- செல்வபெருந்தகை பேட்டி

நாமக்கல் நன்செய் இடையாரு மகா மாரியம்மன் கோவில் ஆடி மாத நவசண்டி மஹா யாகம்