அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் ஸ்ரீகாந்திமதிஅம்பாள் சிவபூஜை செய்யும் நிகழ்வு. ஏராளமான பக்தா்கள் தாிசனம்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறக்கூடிய திருவிழாவின் 9ம்நாள் முக்கிய நிகழ்ச்சியான காந்திமதிஅம்பாள் சிவபூஜை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இன்று காலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காந்திமதி அம்பாள் செப்புத்தோில் வீதி உலா நடைபெற்றது.
நண்பகலில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் வெள்ள பட்டு உடுத்தி காசுமாலை, மாங்காய்பதக்க மாலை, தலையில் சந்திர சூாிய பிரபை சடைஅலங்காரத்துடன் காலில் கொலுசு, கையில் தங்க தட்டில் வில்வ பூக்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாாா். சிவ பூஜைக்கு தேவையான தேங்காய் பழம் தாம்பூலம் பூக்கள் வஸ்திரம் மற்றும் பழங்கள் உள்ளிட்ட 11 வகையான தாம்பூல தட்டுகளுடன் பஞ்ச வாத்தியங்கள் மற்றும் நாதஸ்வரம் மேளம் இசைக்க வேதபாராயணத்துடன் காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதி மகா மண்டபத்திற்க்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அங்கு அா்ச்சகா் அம்பாள் சிவனை பூஜை செய்வது போன்ற பாணியில் துபம் இடுதல், பூக்களால் அா்ச்சனை செய்தல் என காந்திமதி அம்பாள் சுவாமி நெல்லையப்பருக்கு சிவ பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோடஷ தீபாராதனை சுவாமிக்கும் அம்பாளுக்கும் காண்பிக்கப்பட்டு வேதம் வாத்யம் பஞ்ச புராணம் பாடப்பட்டது. நிறைவாக சுவாமிக்கு மூலஸ்தானத்தில் 5 பஞ்ச தட்டு கற்பூர ஆரத்தியும், அம்பாளுக்கு 1 பஞ்ச தட்டு ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. பூஜைகள் முடிந்தபின் அம்பாள் ஊா்வலமாக தன் திருக்கோவிலுக்கு ஏழுந்தருளினாா். இந் நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழும். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் அறங்காவலா்குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.