in

நாட்டின் 76 ஆம் ஆண்டு குடியரசு தின விழா பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

நாட்டின் 76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு : சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்

பாரதத்தின் 76வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் தேசிய நினைவகங்கள் தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 76 ஆம் ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் சூழலில் பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் தேசிய நினைவகம் ராமேஸ்வரம் தீவில் பேக்கரும்பு என்னும் இடத்தில் அமைந்துள்ளது

இந்த நினைவகத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், உள்ளிட்ட அரசு விழா காலங்களில் அப்துல்கலாம் தேசிய நினைவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கு ரம்யமாக காட்சியளிக்கும்

அதன் அடிப்படையில் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கலாம் தேசிய நினைவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கே ரம்யமாக காட்சியளித்தது இதனை வெளி மாவட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

What do you think?

காரைக்காலில் நடைபெற இருக்கும் இன்று இந்திய நாட்டின் 76 – வது குடியரசு தின விழா

ராமநாதபுரம் கவினா குளோபல் பள்ளியில் நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது