in

எம்பிரான் படத்தின் சர்ச்சைக்கு அபிமன்யூ சிங் விளக்கம் 

எம்பிரான் படத்தின் சர்ச்சைக்கு அபிமன்யூ சிங் விளக்கம் 

 

எம்பிரான் படத்தின் சர்ச்சைக்கு அப்பிடத்தில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங் விளக்கம் அளித்துள்ளார்.

குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவரின் பெயரை வில்லனுக்கு வைத்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது.

அதன் பிறகு பால்தேவ் என பெயரை மாற்றியும் 25 இடங்களை கட் செய்து விடும் மீண்டும் படம் திரையிடப்பட்டது. ஆனாலும் இன்னும் சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்த பாடில்லை இது குறித்து அபிமன்யு கூறியதாவது.

சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் நடிகருடைய கடமை என்னவென்றால் படத்திற்கு தேவையானதையும் இயக்குனர்கள் கூறுவதையும் கேட்டு நடிப்பதே எங்கள் வேலை எம்புரான் படத்தின் சர்ச்சைகளை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் யாருடைய உணர்வையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல ஒரு படத்தில் காட்சி எப்படி வரவேண்டும் என்பதை இயக்குனரும் எழுத்தாளரும் மட்டுமே தீர்மானிக்கின்றனர்.

படத்தில் வன்முறை காட்ட விரும்புவது இயக்குனரின் விருப்பம் அவர் சொல்வதைக் கேட்டு நாங்கள் நடிக்கிறோம் நடிகர்களுடைய வேலையும் அதுதான் என்று கூறியுள்ளார்.

What do you think?

சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் பங்குனி திருத்தேரோட்டம்

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி