அபிநய சரஸ்வதியின் அந்த நாள் ஞாபகம்
கன்னடத்து பைங்கிளி என்ற அடைமொழியுடன் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த நடிகை சரோஜாதேவி.
தனது பழைய நினைவுகளை அசைபோட்டுள்ளார் நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் இல்லாத போது என் அம்மா தான் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வச்சாங்க முதல்ல நான் கன்னட படத்துல தான் நடிச்சேன்.
அதுக்கப்புறம் இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி சாரோட நடிக்கறதுக்குகே எனக்கு நேரம் போதல ஏன்னா ஒரு வருஷத்துக்கு நான் முப்பது படம் நடிப்பேன்.
ஒருநாள் நான் ரேவதி ஸ்டூடியோவில் கச்சதேவயானி படம் சூட்டிங்கில் இருந்தபோது திடீரென்று யாரோ உள்ளே நுழைந்தார்கள். எல்லாரும் எழூந்து அவருக்கு வணக்கம் சொன்னாங்க உடனே என்னை அறிமுகம் செஞ்சு வச்சு இவங்க பெங்களூரில் இருந்து நடிக்க வந்து இருக்காங்க அப்படின்னு சொன்னங்க நானும் எழுந்திருச்சு அவருக்கு வணக்கம் சொன்னேன்.
அவரு உடனே நல்லா இருக்கியா..இன்னு என்னிடம் கன்னடத்தில் கேட்டார் அதன் பிறகு அங்கிருந்து சென்று விட்டார். அதுக்கபுறம் தான் தெரியும் அவர் பெயர் எம்ஜிஆர்…இன்னு.
அந்த சந்திப்புக்கு பிறகு திருடாதே என்ற படத்தில் இந்த பொண்ண போடுங்க அப்படின்னு என்னை recommend செய்தது எம்ஜிஆர் சார் தான். அந்த படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய படங்கள் வந்து நான் ரொம்ப பிஸியான நடிகையா மாறிட்டேன்.
அதனால என்னால சூட்டிங்…ங்கு சரியான நேரத்துக்கு வர முடியாது ஆனால் காலையில் 7:00 மணிக்கு எல்லாம் ஷூட்டிங் வந்து எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார் எம்ஜிஆர் சார்.
பல நேரங்களில் எனக்காக அவர் அட்ஜஸ்ட் செய்திருக்கிறார். நான் எம்ஜிஆர் கூட 26 படங்கள் நடித்திருக்கிறேன். சிவாஜி சாரை பற்றி சொல்லனும்னா அவர் ஒரு ராஜா மாதிரி அவருடைய நடை உடை பாவனை செயல் எல்லாமே ஒரு ராஜாவையே பிரதிபலிக்கும்.
பிரபல நடிகையாக இருக்கும் போது எல்லோரும் நிறைய பேரை காதலிப்பாங்க ஆனா நான் சினிமாக்கு வரும்போது எங்க அம்மா என்னிடம் strict …டா சொல்லிட்டாங்க நீ யாரையும் காதலிக்க கூடாது அப்படி காதலிச்சேன்…னா வீட்ல இருக்கும் மத்த பெண்களை அது பாதிக்கும் அதுக்கபுறம் வாழ்நாள் முழுக்க உன்னை தனியா வைத்திருப்பேனே தவிர உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாங்க.
அதனால அந்த பக்கமே நான் போனது இல்ல அப்புறம் எப்படிப்பா நான் காதலிக்கிறது அப்படின்னு சிரிச்சுக்கிட்டே கேட்டாங்க.