தேர்தல் பத்திர முறை ரத்து
அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், வங்கிகள் உடனடியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திர முறை மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் ஸ்டேட் வங்கி (SBI) வழங்க வேண்டும் என தீப்பளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திர முறையில் வெளிப்படை தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத தேர்தல் பத்திரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவுகளை மீறும் வகையில் உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.