புதுச்சேரியில் சுமார் 250 ஆண்டுகள் பழமையான கவர்னர் மாளிகைசேதம்..பழைய சாராய ஆலை வளாக கட்டிடத்தை கவர்னர் மாளிகையாக மாற்றும் பணி…
டென்னிஸ் விளையாடி முடித்த கையோடு, அதே உடையில் வந்து பார்வையிட்டார் முதலமைச்சர் ரங்கசாமி….
புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே உள்ள கவர்னர் மாளிகை பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடடமாகும்.சுமார் 250 ஆண்டு பழமையான புதுவை கவர்னர் மாளிகை சேதம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் இரும்பு கம்பிகள் மூலம் தளத்துக்கு முட்டுக்கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு முடிவு செய்தது.
இதற்காக கவர்னர் மாளிகையை இட மாற்றம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து 3 1/2 ஆண்டுகளுக்கு மேலாக புதுவைக்கு பொறுப்பு கவர்னர் இருந்ததால் இட மாற்றம் நடைபெறவில்லை. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் கைலாஷ்நாதன் மாளிகையை வேறு இடத்துக்கு மாற்ற அறிவுறுத்தினார்.
அதையடுத்து கடற்கரை சாலை பழைய சாராய வடி ஆலை இருந்த இடத்தில் கட்டப்பட்ட புதிதய கட்டித்துக்கு மாற முடிவு எடுக்கப்பட்டது. பழைய சாராய வடி ஆலை இருந்த இடத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நட்சத்திர அந்தஸ்துடன் கடல் அழகை ரசிக்கும் வகையில் ரூ 13 கோடியில் குடும்ப பொழுதுப்போக்கு மையம் கட்டடப்பட்டது. 3 ஏக்கர் உள்ள இந்த இடத்தில் 3 ஆயிரம் சதுர மீட்டரில் கீழ்தளமும், 2500 சதுர மீட்டரில் முதல் தளமும், அதற்கு மேல் சிறிய பகுதியும் கட்டடமாக கட்டப்பட்டது. அதில் நட்சத்திர ஒட்டல் நிறுவனங்களிடம் லீசுக்கு விட முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த முடிவை மாற்றி கவர்னர் மாளிகையை அங்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.இதற்காக புதிய் கட்டிடடத்தில் கவர்னர் மாளிகை, அலுவலக அறைகள், மின்வசதி, தரைதளம் உள்ளிட்ட வசதிகளுடன் மாற்றங்கள் ரூ. 3.88 கோடியில் செய்யப்பட உள்ளது. கவர்னர் கைலஷ்நாதன் முன்னிலையில் முதல் அமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து பணிகளை கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் திலாஸ்பேட்டை டென்னிஸ் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த முதல்வர் ரங்கசாமி, அங்கிருந்து டென்னிஸ் சீருடையில் பழைய சாராய வடிவலை கட்டிடத்துக்கு வந்தார். அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஆளுநர் மாளிகை கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொறியாளர்கள், ஊழியர்களிடம் பணி குறித்து விசாரித்தார். எந்தெந்த இடத்தில் என்னென்ன அறைகள் வருகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்பு மூன்று மாத காலத்தில் இந்த பணிகளை முடித்து, ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.