அச்சிறுபாக்கம் திரிநேத்ரதாரி யோகா பயிற்சி ரதசப்தமியையொட்டி சூரிய நமஸ்காரம் போட்டி
அச்சிறுபாக்கம் திரிநேத்ரதாரி யோகா பயிற்சி நிலையம் மற்றும் அச்சிறுபாக்கம் மலை நகரம் லயன்ஸ் சங்கம் இணைந்து ரதசப்தமியையொட்டி சூரிய நமஸ்காரம் போட்டிகளை மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடத்தியது.
உத்தராயண காலத்தில் தென்திசையில் இருந்து வட திசை நோக்கி சூரிய பகவான் பயணிப்பதை ரத சப்தமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பல்வேறு பள்ளி, கல்லூரி, யோகா மையங்கள் மற்றும் பொதுமக்கள் 400 -க்கும மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் யோகா நடுவர்களாக யோகா ஆசிரியர்கள் சுதாகர் சதீஷ், இசக்கி ராஜா, தீபா ராணி, சஞ்சய் ஆகியோர் செயல்பட்டனர்.
இந்த விழாவில் 108 சூரிய நமஸ்காரம் செய்தவர்களுக்கு
முதல் பரிசு, 75 சூரிய நமஸ்காரம் பயிற்சி செய்தவர்களுக்கு இரண்டாவது பரிசும், 50 சூரிய நமஸ்காரம் சுற்றுகள் செய்தவர்களுக்கு 3-வது பரிசும் என மூன்று பிரிவுகளில் சூரிய நமஸ்காரம் போட்டிகள் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திரிநேத்ரதாரி யோகா மையத்தின் நிறுவனர் யோகா தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். திருவாடுதுறை ஆதினத்தின் சட்ட ஆலோசகர் ஜெயச்சந்திரன், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தலைமை சிவாச்சாரியார் சங்கர்,பரதநாட்டிய ஆசிரியர் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.