நடிப்பதா? விலகுவதா? விரையில் அறிவிக்கிறேன்
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வயதானபின்னரும் கலக்கி கொண்டிருப்பவர் மறைந்த என் டி ராமராவ் மகனான பாலகிருஷ்ணன்.
இவர் ஆந்திராவில் இந்துபுரம் என்ற தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பாக போட்டியிட்டார். தேர்தலை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தால் நடிகர் பாலகிருஷ்ணன்.
சினிமாவை விட்டு விலகி விட்டதாக செய்தி வெளியான நிலையில், அது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் நான் கடந்த 50 நாட்களாக கேமரா முன் நிற்க வில்லை, உண்மைதான் தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகு தான் நான் சினிமாவை விட்டு விலகுவதா அல்லது தொடர்ந்து நடிப்பதா என்பதை முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.