in

ஆழ்துளை கிணறை ஆக்கிரமித்து பயன்படுத்த விடாமல் தடுக்கும் தாசில்தார் மீது நடவடிக்கை பொதுமக்கள் திடீர் போராட்டம்

நிலக்கோட்டை அருகே, என்.கோவில்பட்டி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீருக்காக குளத்தின் கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறை ஆக்கிரமித்து பயன்படுத்த விடாமல் தடுக்கும் தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்து,உடனடியாக குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது…….

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நூத்துலாபுரம் ஊராட்சி என்.கோவில்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்,இக்கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் ரூபாய் 5-இலட்சம் ஒதுக்கப்பட்டது,

இதனையடுத்து கடந்த வாரம் அதே கிராமத்திற்கு சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லாண்டி அம்மன் கோவில் குளத்தின் கரையில் சுமார் 800 அடி ஆழத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது,

அன்று முதல் அந்த போர்வெல் கிணற்றை அபகரிக்கும் நோக்கில் அருகிலுள்ள தோட்டத்துக்காரர் ஒருவர் ஆக்கிரமித்துக்கொண்டு போர்வெல்லில் குழாய்கள்,மோட்டார் பம்புகள் அமைக்க விடாமல் தடுத்துவருவதாகவும் இதனால் மழைகாலத்தில் போதிய குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதியடைந்து வருவதாக கூறி நேற்று திடீரென குளத்துக்குல் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சங்கிலிபாண்டியன் கூறுகையில் நிலக்கோட்டை ஒன்றியத்தில் என். கோவில்பட்டி கிராமம் வரட்சியான பகுதி என்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது,எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் கிராமத்தின் அருகே உள்ள குளக்கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை குடிநீர் குழாய்யை அபகரிக்கும் நேக்கில் அருகிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தாசில்தாரின் குடும்பத்தினர் ஊராட்சி நிர்வாகத்தினரை பணிசெய்யவிடாமல் தடுத்துவருகிறார்கள், இதனால் கைக்கு கிடைத்தது வாய்க்கு எட்டாதது போல அரசு சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்தும்,நல்ல குடிநீரை பார்த்தும் எங்களால் குடிநீரை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது, இதனால் நாங்கள் 10முதல் 13 ரூபாய் வரை குடிநீரை காசு கொடுத்து வாங்கிதான் பயன்படுத்தி வருகிறோம்,மேலும் குளத்துப்பட்டி,பாப்பாகுளம் கண்மாய்களில் இருந்து வரும் மழைநீர் இந்த செல்லாண்டி அம்மன் கோவில் கண்மாய் நிரம்பும் இதன் மூலம் என்.கோவில்பட்டி,நூத்துலாபுரம்,குளத்துப்பட்டி,மீனாட்சிபுரம்,பெருமாள்பட்டி,பங்களாபட்டி, வடக்கு விராலிப்பட்டி,தெற்கு விராலிப்பட்டி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும்,இக்குளம் மறுகால் பாய்ந்து சுமார் 20-அடி அகலம் உள்ள ஓடை வழியாக,நிலக்கோட்டை கொங்கர் குளத்திற்கு செல்கிறது,
எனவே எங்கள் குளத்தையும், கரையிலுள்ள புதிய குடிநீர் போர்வெல்லையும்,தண்ணீர் செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ஓடையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ள தோட்டத்துக்காரரர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

What do you think?

சிட்டிசன் படத்தில் வருவது போன்று அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம்.

வத்தலகுண்டில் இரண்டு மாடி வீடு திடீரென இடிந்து விழுந்தது பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு