in

முன்னாள் ராணுவ வீரரான தெய்வத்தை மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை

கடந்த 2012 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் மயிலாடும் பாறை காவல் நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரரான தெய்வத்தை ஜட்டியுடன் தரையில் உட்கார வைத்து கை கால்களில் விலகிட்டு அடித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனு

ராணுவத்தில் பணிபுரிந்த போது தீவிரவாதிகளுக்கு எதிராக நான் திறன் பட செயல்பட்டதால் இரண்டு பாராட்டு சான்றிதழ்கள் கிடைத்திருக்கிறது அப்படிப்பட்ட ஒரு ராணுவ வீரனுக்கு எதிராகவும் ஒரு அரசியல்வாதிக்கு ஆதரவாகவும் தேனி மாவட்ட காவல் துறையினர் செயல்பட்டு குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறார்கள் எனவும் முன்னாள் ராணுவ வீரர் தனது புகார் மனுவில் தகவல்.

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த மயிலாடும்பாறை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான தெய்வம் மதுரையில் உள்ள தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நான் கடந்த 22-4-2012 ஆம் தேதி எனது குடும்ப குடும்ப பிரச்சனை காரணமாக மயிலாடும் பாறை காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றபோது நான் கொடுத்த புகாரை வாங்க மறுத்து விட்டு காவல் துறையினர் என்னை ஜட்டியுடன் தரையில் உட்கார வைத்து கை கால்களில் விலங்கிட்டு அடித்து சிறையில் அடைத்தனர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தும் இதுவரை எனக்கு நீதி கிடைக்கவில்லை

மேலும் இது சம்பந்தமான ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் குற்றவாளிகளை காப்பாற்றினர் இதனால் நான் நீதிமன்றத்தில் 311 மனு தாக்கல் செய்தேன் அந்த மனுவை அரசு வழக்கறிஞர் மூலமாகவும் காவல் ஆய்வாளர் மூலமாகவும் தாக்கல் செய்ய சொல்லி மாண்புமிகு நீதிமன்றத்தால் ரிட்டன் செய்து விட்டனர்

இப்படி எனக்கு எதிராக தேனி மாவட்ட காவல்துறையினர் செயல்பட்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள் இதனால் எனது வாழ்வில் நிம்மதி இல்லை எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது

நான் செய்யாத குற்றத்திற்காக என்னை ஜட்டியுடன் காவல் நிலையத்தில் அமர வைத்து கை கால்களில் விளங்கிட்டு அடித்து துன்புறுத்தி கொடுமைகளை செய்த காவல்துறையினருக்கு எதிராக நான் கடந்த 13 வருடங்களாக நீதி கேட்டு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன்

மேலும் நான் ராணுவத்தில் பணிபுரிந்த போது தீவிரவாதிகளுக்கு எதிராக நான் திறன் பட செயல்பட்டதால் இரண்டு பாராட்டு சான்றிதழ் கூட வாங்கி இருக்கிறேன் ஆனால் தற்போது ஒரு அரசியல்வாதிக்காக தேனி மாவட்ட காவல் துறையினர் இப்படி குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார்கள்

மேலும் போட்ட எட்டு வழக்குகளில் எதிரிகளை காப்பாற்றும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது

இது குறித்து இந்திய ராணுவம் தமிழ்நாடு தகவல் ஆணையம் முதலமைச்சர் தனிப்பிரிவு தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை ஆகிய அனைத்து துறவினரும் பல்வேறு உத்தரவுகளை அளித்தும் அதை மதிக்காமலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 16 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தற்போது மதுரையில் உள்ள தென் மண்டல காவல்துறை தலைவரிடம் மனு அளித்திருக்கிறேன் இதற்கு தக்க நீதி கிடைக்கும் என நம்புகிறேன் மேலும் இந்த விஷயங்கள் அனைத்தையும் மனதில் குறிப்பிட்டும் உள்ளேன் என கூறினார்.

What do you think?

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆவணித் தவசுக் காட்சி

நாகையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா