in

திருச்சி எஸ்.பி.வருண்குமார் மீது நடவடிக்கை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேட்டி

திருச்சி எஸ்.பி.வருண்குமார் மீது நடவடிக்கை – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும்,தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுத்தலைவர்/ சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேட்டி

தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுத்தலைவர்/ சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் சட்டப்பேரவை செயலர் முனைவர்சீனிவாசன் உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் ,அருள், சக்ரபாணி , நல்லதம்பி , மாங்குடி ,
மோகன் ஆகியோர் இன்று திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

இவ்வாய்வின்போது மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு மாலை செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன்….. திருச்சியில் சுற்றுலா மாளிகை 3 கோடி 21 லட்சத்தில் புதுப்பிக்கப்படுகிறது.மூன்று கோடி ரூபாயில் வேளாண்மை பொறியியல் கல்லூரியின் பயிற்சி மையம் மேம்பாட்டு பணி நடைபெறுகிறது. ஆவின் நிறுவனம் சார்பில் 23 கோடி ரூபாய் செலவில் 6000 லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டு ஐஸ் கிரிம் தயாரிப்பு பணிகள் துவங்கும். தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் 20 லட்சம் செலவில் ஆராய்ச்சி மையம், அருங்காட்சியகம் நிறுவப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது சட்டப் பள்ளி முதல்வர் கலந்து கொள்ளவில்லை அவர் மீது இந்தக் குழு மாவட்டத்தை விட்டு செல்வதற்குள் நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் நேரில் சந்தித்து உடல்நிலை சரியில்லாத காரணத்தை விவரித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை,

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரும் இந்த ஆய்வின்போது இல்லை அவர் வழக்கு விஷயமாக வெளியூர் சென்று இருப்பதாக கூறப்பட்டது அவர் வழக்கு விஷயமாக சென்றது உண்மை என நிரூபிக்க வேண்டும் அதற்கு உரிய காரணங்கள் இருப்பின் அவர் மீது நடவடிக்கை இருக்காது இல்லையென்றால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேல்முருகன் தெரிவித்தார்.

What do you think?

அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மறைந்த பாண்டுரங்கன் பிறந்தநாள் விழா

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 27-09-2024