in

ஜிப்மர் எம்பிபிஎஸ் சேர்க்கையில் அதிரடி..இரட்டை குடியுரிமையுடைய 9 பேர் நீக்கம்

ஜிப்மர் எம்பிபிஎஸ் சேர்க்கையில் அதிரடி..இரட்டை குடியுரிமையுடைய 9 பேர் நீக்கம்..சபாநாயகரின் புகாரால் ஆளுநர் நடவடிக்கை..

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர்,ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் 250 மருத்துவ மாணவர்கள் படிப்பதற்கான உத்தரவு உள்ளது. இதில் புதுச்சேரி-காரைக்காலை சேர்ந்த 64 மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

அந்த வகையில் இரட்டை குடியுரிமையில் மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்வதாக வந்த புகாரை அடுத்து, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பரிந்துரையில், என்எம்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் இரட்டை குடியுரிமை உடைய 9 பேர் நீக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

புதுச்சேரியை சேர்ந்த 60 மாணவர்கள் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த 53 மாணவர்கள் இன்று ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர், 4 பேரின் சான்றிதழ்கள் சுகாதாரத்துறை இயக்குனர் பரிசீலனையில் உள்ளது. எனவே அவர்களும் கல்லூரியில் சேர்வது உறுதி.
இதற்கு உறுதுணையாக இருந்ததுணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொண்ட சபாநாயகர்,கடந்த காலங்களில் புதுச்சேரி மாணவர்களின் இடங்கள் பறிபோனது. இந்த ஆண்டு இந்த இடம் முழுமையாக புதுச்சேரி மாணவர்களுக்கே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறினார்..

What do you think?

மண்ணாடிபட்டு தொகுதி பாஜக பிரமுகர் சீனுவாச மூர்த்தி தலைமையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா

நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது