in

ஆக்‌ஷன் நிறைந்த அதிரடி த்ரில்லர் ..விடாமுயற்சி… Movie Review


Watch – YouTube Click

ஆக்‌ஷன் நிறைந்த அதிரடி த்ரில்லர் ..விடாமுயற்சி… Movie Review

ரசிகர்களின் பொறுமையை சோதித்து பதற்றத்துடனே வைத்திருந்த மகிழ்திருமேனி ...யின் விடாமுயற்சி இன்று உலகம் எங்கும் ரிலீஸ் ஆனது.

இரண்டு வருட காத்திருப்பதற்கு பின் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா என்பதை பார்ப்போம்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் வில்லனாக ஆரவ், அர்ஜுன், வில்லியாக ரெஜினா, நகைச்சுவை ..க்காக யோகி பாபு மற்றும் சிலர்.

இசை அனிருத், ஒளிப்பதிவு நிரவ் ஷா, மற்றும் ஓம் பிரகாஷ் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சி.

பிரேக் டவுன் …னை பார்க்காமல் விடாமுயற்சியை பார்த்தால் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். ஹாலிவுட் ரேஞ்சுக்கு மகிழ்திருமேனி மிரட்டி இருக்கிறார்.

கமர்சியல் படங்களை மட்டுமே நடித்து வந்த அஜித் இந்த படத்தில் ஆக்க்ஷனில் மிரட்டி இருக்கிறார். சுற்றி இருக்கும் எல்லோரும் தன்னை ஏமாற்றும் பொழுது தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்திக்கும் ஒரு மனிதன் விடாமுயற்சியுடன் எப்படி சாதிக்கிறான் என்பதே கதை.

விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்கள் திரிஷா அஜித் தம்பதியினர், திரிஷா தன்னுடைய அப்பா வீட்டுக்கு செல்ல ஆசைப்படுகிறார் அஜித் கடைசியாக நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று கூறி அவரை டிராப் செய்ய வருகிறார்.

இடையில் கார் பிரேக் Down ஆக, ரெஜினா மற்றும் அர்ஜுன் திரிஷாவை மட்டும் ஒரு டிரக்கில் ஏற்றுக்கிறார். Truck…கில் செல்லும் திரிஷா காணாமல் போக அஜித் அவரை தேடி போகிறார் ஒரு கட்டத்தில் அர்ஜுனை பார்க்கும் அஜித் அவரிடம் த்ரிஷா எங்கே என்று கேட்க அர்ஜுன் நீங்கள் யார் ? எனக்கு தெரியாது என்று கூற, போலீசுக்கு போகும் அஜீத்..க்கு பாசிட்டிவான பதில் கிடைக்கவில்லை.

இறுதியில் அஜித் திரிஷாவை கண்டுபிடித்தாரா என்பதை செம ட்விஸ்ட்..டுடன் சொல்லிருக்கிறார் இயக்குனர். தன் மனைவியை தொலைத்து விட்டு தேடும் அஜித் ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தில் பதறவைக்கிறார், வில்லனுக்கும் சரி ஹீரோவுக்கும் சரி ஓவர் பில்டப் கொடுக்காமல் அழகாக கதையை நகர்த்திருக்கிறார்.

திரிஷா அஜித் ஜோடி கண்ணுக்கு குளிர்ச்சி. வில்லனாக வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆக்சனில் மிரட்டி இருக்கிறார். வழக்கமான அஜித் படமாக இல்லாமல் எதிர்பாராததை எதிர்பார்த்து காத்திருக்க வைத்திருகிறது விடாமுயற்சி.

முதல் பாதி ஸ்லோவாக போனாலும் இரண்டாம் பாதியில் கதை விறுவிறுப்பாக ஓடுகிறது. கிளைமாக்ஸ் ..இல் எதிர்பார்க்காத அதிர்ச்சியான ட்விஸ்ட் . அஜர்பைஜனின் காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

மகிழ் திருமேணி படம்…னாளே சிட் நுனியில் உட்கார்ந்து தான் படம் பார்க்கணும் அதே ஸ்டைலில் அடுத்தடுத்த திருப்பங்களுடன் திரைக்கதையில் கோட்டை விடாமல் அழகாக நூல் பிடித்து சென்றிருகிறார் மகிழ் திருமணி.

அஜித் தனது மொத்த உழைப்பையும் கொடுத்து படத்தை விழாமல் தாங்கிப் பிடித்திருக்கிறார். Trailer மற்றும் Teaser..ரில் ஸ்கோர் செய்த விடாமுயற்சி ரசிகர்களிடமும் ஸ்கோர் செய்திருக்கிறது.

குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம். வழக்கம் போல் தன் இசை மூலம் படம் முழுவதும் தெறிக்க விட்டிருகிறார் அனிருத், பிஜிஎம் வெறித்தனமாக இருக்கிறது.

இரண்டு வருட காத்திருப்பு வீணாகவில்லை. பாராட்டுக்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் ..தை Young ஸ்டைலில் பார்க்கலாம். அஜித் ரசிகர்களுக்கு சமம் ட்ரீட். ரசிகர்களுடைய Expectation..னைவிட அதிகமாகவே சம்பவம் செய்திருப்பதாக ரசிகர்கள் Review கொடுத்திருக்கின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் தயவுசெய்து நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுகாதிர்கள், தியேட்டருக்கு வந்து பாருங்கள் நிச்சயம் படம் பிடிக்கும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மீண்டும் திரையில் அப்பாஸ்

100 கோடியில் பிரம்மாண்டமாக தயாராகும் மூக்குத்தி அம்மன் 2