நீண்ட நாட்களூக்கு பிறகு திரையில் தோன்றும் நடிகர் அப்பாஸ்
காதல் தேசம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ்.
பல இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகர் அப்பாஸ். வசீகரமான அழகு இருந்தும் இவருக்கு சரியான சினிமா வாய்ப்புகள் அமையாததால் சினிமா துறையை விட்டு குடும்பத்துடன் லண்டனில் தற்பொழுது வசித்து வருவார்.
10 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையில் நடிக்க ஆர்வம் தெரிவித்தவர் வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
நடிகர் அப்பாஸ் களவாணி, வாகை சூடவா, உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணம் இந்த வெப் சீரீஸ்…சை இயக்குகிறார், துஷாரா விஜயன் நடிக்கும் இந்த சீரீஸ்..இல் முக்கிய கதாபாத்திரதில் நடிகர் அப்பாஸ் நடித்து வருகிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் அப்பாஸை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.