நடிகர் ஆதியின் தந்தை 75 வயது பூர்த்தி விஜயரத சாந்தி விழா
திருக்கடையூர் ஆலயத்தில் பிரபல திரைப்பட நடிகர் ஆதியின் தந்தை 75 வயது பூர்த்தி விஜயரத சாந்தி விழா, நடிகை நிக்கி கல்யாணி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு,ஆலயம் தரிசனம் செய்தனர்.
மிருகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஆதியின் தந்தையும் பிரபல தெலுங்கு இயக்குனருமான ரவி ராஜா பினிசெட்டியின் 75 ஆவது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு புகழ் பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் விஜயரத சாந்தி விழா இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடிகர் ஆதியின் பெற்றோர்கள் ரவி ராஜா பினிசெட்டி, ராதாரணி பினிசெட்டி ஆகியோருக்கு ஆலய வெளிப்பிரகாரத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு ஆயுள் ஹோமங்கள் செய்யப்பட்டது.
கணேஷ் குருக்கள் மற்றும் மகேஷ் குருக்கள் தலைமையிலான வேத விற்பனர்கள் ஹோமங்களை செய்து வைத்தனர்.
தொடர்ந்து கடங்களில் வைக்கப்பட்ட புனித நீர் கொண்டு தம்பதியினருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மாலை மாற்றும் வைபவமும் 75வது வயது விஜயரத சாந்தி திருமணமும் நடைபெற்றது.
இதில் நடிகர் ஆதியின் மனைவியும் நடிகையுமான நிக்கிகல்யாணி, மலையன் வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் M.P.கோபி மற்றும் திரையுலக பிரமுகர்கள் உறவினர்கள் பங்கேற்று தம்பதியினரிடம் ஆசி பெற்றனர்.
தொடர்ந்து நடிகர் ஆதி குடும்பத்தினர் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதியில் தரிசனம் செய்தனர் அவர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.