மூன்று தங்க பதக்கங்களை வென்ற நடிகர் அஜீத் மகன்
தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்திருக்கிறது. அஜித் அண்மையில் துபாய் ரேசில் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் பத்ம பூஷன் விருதையும் பெற்று சந்தோஷத்தில் இருக்கும் அவருக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறார் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்.
தந்தையை போல மகனும் விளையாட்டில் பின்னி இருக்கிறார்.
ஆத்விக் அஜித் குமார், சிறு வயதிலிருந்தே கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர், சென்னையின் எஃப்சி ஜூனியர் அணியிலும் இடம் பெற்றிருகிறார். அவரது பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்திருக்கிறார், ஒன்றல்ல மூன்று பந்தயத்தில் கலந்துகொண்டு மூன்றிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்க பதகங்களை வென்றிருக்கிறார்.
ஓட்டப்பந்தயத்தில் மகன் ஓடியதை வீடியோ எடுத்து இன்ஸ்டா…வில் பதிவிட்டிருக்கிறார் ஷாலினி.