in

பள்ளி ஆண்டு விழாவில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கலந்து கொண்டு சிறப்புரை

பள்ளி ஆண்டு விழாவில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கலந்து கொண்டு சிறப்புரை

 

சாத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது மாணவர்கள் முன்பாக பேசிய பார்த்திபன் ஒரு திரைப்படத்திற்காக தேசிய விருது பெற போது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறானோ அதே போல் விமர்சனம் வரும் போதும் அதை பொறுத்து கொள்கிற மனநிலை இருந்தால் தான் தன்னால் உயர முடியும் என்றார்.

மேலும் பேசிய நடிகர் பார்த்திபன் அடுத்து ஆடியன்சும் ஆவுடையப்பனும் என்ற கதையை இயக்கப் போவதாக தெரிவித்தார். இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் திரையின் வழியாக நேரடியாக ஆடியன்ஸ் உடன் பேசுவது போல் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பேசிய நடிகர் பார்த்திபன் Teenz திரைப்படம் திரையரங்கில் சரியாக ஓடவில்லை என்றாலும் ஓ.டி.டி தளங்களில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது எனவும் Teenz படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் புதிய பாதை திரைப் படத்தின் இரண்டாம் பாகம் உள்ளே வெளியே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்க உள்ளதாக பார்த்திபன் தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வேங்கை வயல் விவகாரத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும் என்றார்.

மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சி செய்யும் போது எதிர்க்கட்சிகள் நிறைய எதிர்ப்பு களை தெரிவித்து வருகின்றனர் எனவும் பின்னர் ஆளுங்கட்சி எதிர்கட்சியாக வரும் போது அதே எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர் என்றார்.

மேலும் பேசிய பார்த்திபன் அரசாங்கத்தை எதிர்ப்பதை விட ஆதரித்து நல்ல விஷயங்களை வாங்கிக் கொள்வது நல்லது என்றார். மேலும் ஆளுங்கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் குற்றம் செய்யும் போது அதை சுட்டிக் காட்ட வேண்டியது மக்களின் கடமை என்றார்.

மேலும் பேசிய நடிகர் பார்த்திபன் டங்ஸ்டன் விவகாரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியின் வெற்றி என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான வெற்றி என்றார்.

மேலும் தனியாக ஒரு கட்சியோ அல்லது தனிப்பட்ட மனிதரின் வெற்றி என கொண்டாடுவதற்கான விஷயமாக டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை பார்க்க முடியாது என்றார்.

மேலும் பேசிய நடிகர் பார்த்திபன் தமிழகத்தின் பல்வேறு கோரிக்கை களுக்காக நடிகர் சங்கம் உண்ணா விரத போராட்டங்களில் ஈடுபட்ட போடு அதில் வெற்றி கிடைக்காமல் போனதால் நடிகர்கள் சோர்வடைந்து போவதாக தெரிவித்தார்.

மேலும் எந்த ஒரு விவகாரத்திலும் நடிகர்கள் பேசும் போது நடிகர்கள் பேசுவதை கவனிக்கிறார்களே தவிர அந்த பிரச்சினையை கவனிப்ப தில்லை எனவும் அதனால் பரந்தூர் விமான நிலையம் குறித்து நடிகர் சங்கம் போராட்டம் நடத்துவதை விட அந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண்பது தான் நல்லது என பார்த்திபன் தெரிவித்தார்.

மேலும் பேசிய நடிகர் பார்த்திபன் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் அங்கு சென்ற பின்னாடி மக்களின் சப்போர்ட் நடிகர் விஜய்க்கு முழுமையாக செல்லும் போது அந்த விவகாரத்தில் அரசாங்கம் நினைப்பதை செய்ய முடியாமல் போகும் போது தவெக தலைவர் விஜய்யை போராட்ட களத்திற்கு செல்ல விடாமல் தடுத்தது இயல்பான விஷயம் தான் என்றார்.

மேலும் தவெக தலைவர் விஜய்யை பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் போராட்ட களத்திற்கு அனுமதிக்கப்படாததற்கு உச்சத்தில் இருப்பவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக எந்த கட்சியாக இருந்தாலும் செய்கின்ற விஷயம் தான் எனவும் இதனை மீறி ஜெயிக்க வேண்டியது புதிதாக வருபவர் களுக்கான மிகப்பெரிய பொறுப்பாகவும் கடமையாக இருக்கும் என்றார்.

What do you think?

தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 1098 மாணவிகள் 1098 எண் வடிவத்தை அமைத்து உலக சாதனை

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி