in

போதியில் கார் ஓட்டி பைக்கில் வந்தவரை விபத்துக்குள்ளாக்கிய நடிகர் பைஜு சந்தோஷ் கைது…

போதியில் கார் ஓட்டி பைக்கில் வந்தவரை விபத்துக்குள்ளாக்கிய நடிகர் பைஜு சந்தோஷ் கைது…

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மலையாள நடிகர் பைஜு சந்தோஷை கேரள போலீசார் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

கவுடியாரில் இருந்து மணவீயம் வீதிக்கு பைஜூ காரில் சென்றபோது வெள்ளையம்பலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மலையாள நடிகரான பைஜு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எராளமான படங்களில் குணச்சித்திரவேடங்களில் நடித்தவர். இவர் நேற்று முன்தினம் இரவு போதையில் நிதானம் இல்லாமல் கார் ஓட்டி சென்ற போது எதிரே பைக்கில் வந்தவரை இடித்து கார் நிக்காமல் சிக்னலையும் மோதி சேதமாகியது.

இந்த விபத்தில் பைக்கில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். போதையில் இருந்த நடிகர் பைஜு சந்தோஷை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவரை பரிசோதனைக்கு அழைத்தபோது பரிசினை…இக்கு மருத்து விட்டார், இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

பிறகு ஜாமீனில் அவரை விடுதலை செய்தனர், இவருடன் காரில் இவரது மகளும் இருந்ததாக தெரியவந்துள்ளது.

What do you think?

ஜீ மீடியா…வுக்கு எதிராக தல தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – சண். இராமநாதன்