in

மாணவனை வெகுவாக பாராட்டிய நடிகர் பாலா


Watch – YouTube Click

மாணவனை வெகுவாக பாராட்டிய நடிகர் பாலா

 

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு நடிகர் பாலா பைக் பரிசளித்ததை பாராட்டும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த மாணவன் உருவாக்கிய கலைநயமிக்க இருசக்கர பொம்மை இரு சக்கர வாகனத்தை

புதுச்சேரிக்கு வருகை புரிந்த பாலாவிடம் கொடுத்து மகிழ்ச்சி அடைந்தார், இதனை பெற்றுக் கொண்ட பாலாவும் அந்த மாணவனை வெகுவாக பாராட்டினார்..

சின்னத் திரை வாயிலாக லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பாலா. இவரது சமூக சேவை பணிகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து இருசக்கர வாகனத்தை பாலா பரிசாக வழங்கினர். இது அனைவராலும் பாராட்டப்பட்டது.

பாலாவின் இந்த மனிதநேயமிக்க செயலை பாராட்டு வகையில் புதுச்சேரி சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஜெகதீஸ் என்ற மாணவன்.

பயனற்ற தேங்காய், குருமி, சோளக்கதிர், பனைப் பொருட்கள் மற்றும் தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு கலைநயம் மிக்க வகையில் பாலா பரிசளித்த இருசக்கர வாகனத்தை தத்துரூபமாக உருவாக்கி இருந்தார்.

அப்பொழுது அந்த மாணவன் பாலா அண்ணா எனக்கு சென்னை தெரியாது நீங்கள் எப்போதாவது புதுச்சேரிக்கு வந்தால் உங்களுடைய சேவையை பாராட்டி நான் உருவாக்கிய இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தாழ்மையாக கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் வில்லியனூர் தனியார் கல்லூரி விழாவிற்கு வந்த நடிகர் பாலா மாணவன் ஜெகதீஷை அழைத்து பாராட்டி அவர் உருவாக்கிய கலை நியமிக்க இருசக்கர வாகனத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். மேலும் அந்த மாணவனை ஊக்குவிக்கும் வகையில் கட்டி தழுவி அவரை பாராட்டியது கல்லூரி விழாவில் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாலா,…இதுபோன்ற பரிசு பொருட்களை பெறுவதற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை.

இருப்பினும் தம்பி உருவாக்கிய பொம்மை இருசக்கர வாகனத்தை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறேன்..இதுவரை பெரிதாக உதவி எதுவும் செய்யவில்லை. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என கூறினார்..


Watch – YouTube Click

What do you think?

தேர்தல் ரிசல்ட் வெளியானதும் புதுச்சேரி சட்டசபை கூட்ட முடிவு

தனியார் கல்லூரி ஆண்டு விழா செல்பி மழையில் நனைந்த விஜய் டிவிபுகழ் பாலா