கனா காணும் காலங்கள் நடிகர் பிளாக் பாண்டி
நடிகர் பிளாக் பாண்டி கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்.
அதன் பிறகு சினிமாவில் காமெடி நடிகராக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். எப்போதாவது ஒரு சில படங்களில் தலை காட்டுவார் அண்மையில் Youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்ததாவது சினிமாவில் உள்ள ஆர்வத்தால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
சீரியலில் பெயர் எடுத்த அளவிற்கு அவருக்கு வெள்ளித்திரை பெயர் வாங்கி கொடுக்கவில்லை சிறுசிறு கதாபாத்திரங்கலில் மட்டுமே நடித்தவருகு பெயர் சொல்லும் அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிளாக் பாண்டிங் இ எம் ஐ படத்தில் நடித்திருக்கிறார். சினிமாவில் நான் 26 ஆண்டு காலம் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் என்னுடைய உண்மை நிலவரம் என்ன நா என் குழந்தைகளுக்கு பீஸ் கட்ட கூட என்னிடம் பணம் இல்லை வீட்டுவாடகை கொடுக்க சிரமப்படுகிறேன் வெங்கட் பிரபு படத்தில் இயக்கிய கோட் படத்தில் நான் சண்டை போட்டு வாய்ப்பு வாங்கினேன் ஆனால் படம் வெளிவந்த பிறகு நான் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை.
நான் ஒரு முறை சிவகார்த்திகேயனின் ஆபீஸ்க்கு சென்று அவரது மேனேஜரை பார்த்தேன். ஆனால் நான் பணம் கேட்டதாக அவர் நினைத்துக் கொண்டு பணத்தை கொடுத்தார்.
ஆனால் என் அம்மா அதனை வாங்க மறுத்து பணம் வேண்டாம் என் மகனுக்கு வாய்ப்பு மட்டும் கொடுங்கள் என்று கூறினார் எனக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது நான் வருத்தப்படவில்லை காலம் கனியும் என்று காத்திருக்கின்றேன் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.