நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு திருமணம் நடைபெற்றது
நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் நடிப்பை தாண்டி தயாரிப்பளார், , மிமிக்ரி கலைஞர் என்று பன்முகம் கொண்டவர்.
இவர் அஷ்டலட்சுமி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நடிகர் சின்னி ஜெயந்த் மற்றும் ஜெயஸ்ரீ அவர்களின் மூத்த மகனும் விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டர் ஆன ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கும் மானஸ்விக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டு ஜெய் நாராயணன் ஐஏஎஸ் தேர்வு எழுதி 75 வது ரேங்க் வாங்கி வெற்றி பெற்றவர்.
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக பணியாற்றினார்.
தற்போழுது விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக பெறுப்பில் இருக்கும் இவருக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வள்ளியம்மை ஹால்- மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், திரை பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.