in

தயாரிப்பாளர்களை ஏமாற்றிய நடிகர் தனுஷ் இனி படங்களின் நடிக்க தடை…


Watch – YouTube Click

தயாரிப்பாளர்களை ஏமாற்றிய நடிகர் தனுஷ் இனி படங்களின் நடிக்க தடை…

நடிகர் தனுஷ் படங்களின் நடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய படங்கள் தயாரிக்கவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட சங்கங்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டு ஏக மனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

அதாவது இனிமேல் எந்த நடிகரும் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு திரைப்படங்களில் நடிக்க கூடாது ஒரு படத்தை முடித்து கொடுத்துவிட்டு தான் அடுத்த தயாரிப்பாளர்களிடம் கமிட்டாக வேண்டும் என்று சங்கதில் முடிவெடுத்திருக்கிறார்கள்..

காரணம் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்று இன்னும் படங்கள் நடிக்காமல் அல்வா கொண்டிருப்பதால் இனிமேல் தனுஷ் புதிய படங்களில் கமிட் ஆக கூடாது என்றும் ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் காக எல்லா படங்களையும் முடித்து விட்டு தான் புதிய படங்கலில் கமிட் ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் பல படங்கள் தயாரித்து இன்னும் தியேட்டர்கள் கிடைக்கப்பெறாமல் தேங்கியுள்ள நிலையில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டும் தியேட்டர் ஒதுக்கப்படுவதால் 16.8.2024 முதல் புதிய படங்கள் தயாரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் மேலும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட படங்கள் வரும் அக்டோபர் 30ம் தேதி….இக்குள் முடிக்குமாரு தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் தற்பொழுது எல்லாம் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மற்றும் அவர்களின் சொந்த செலவிற்காக சம்பளத்தை உயர்த்திக் கொண்டு போகிறார்கள்.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது .எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கொண்டு வரும் வரை 1.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் நிறுத்துவது என கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தரங்கம்பாடியில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு

அய்யம்பேட்டை அருகே இரண்டு தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..