மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் கோவிந்தா
நடிகர் கோவிந்தாவும் அவரது மனைவி சுனிதா அஹுஜாவும் 37 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறிது காலம் ஒரே வீட்டில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்த இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளது.
கடைசியாக அவர்கள் எண்டர்டெயின்மென்ட் கி ராத் நிகழ்ச்சியில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
நிகழ்ச்சியில், அவர், ” சுனிதா என் வாழ்க்கையில் வந்ததிலிருந்து, நான் முன்னேறிவிட்டேன் என்றார் கடந்த சில தினங்களாக நடிகர் கோவிந்தா தனது மனைவியை விவாகரத்து செய்வதாக செய்திகள் வெளியானது 1990 களில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்தவர் நடிகர் கோவிந்தா.
இவர்கள் பிரிவுக்கு 30 வயது மராத்தி நடிகை தான் காரணம் என்றும் அதன் நடிகையுடன் கோவிந்தா நெருக்கமாக இருபதாகவும் கிசுகிசு எழுந்துள்ளது.
கோவிந்தாவின் பின்தங்கிய சிந்தனை காரணமாக அவரை ஒருபோதும் விரும்பவில்லை என்று சுனிதா ஒருமுறை கூறி இருக்கிறார் இவர் திருமணத்திற்கு முன்பு நடிகை நீலத்தியை காதலித்து வந்தார் ஆனால் தாயின் வற்புறுத்தலின் காரணமாக சுனிதாவை மணந்தார்.