மாமரம் படம் எப்படி உருவானது நடிகர் ஜெய் ஆகாஷ் உருக்கமான பேட்டி
நடிகர் ஜெய் ஆகாஷ் தானே இயக்கி நடிகனாக நடித்து நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரும் படம் ‘மாமரம்’.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அனைத்தும் ஜெய் கைவண்ணத்தில் உருவாக்கியுள்ளது.
இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ‘காதல்’ சுகுமார், ஒரு இளைஞன் மாமரத்தின் மீது அதிக பற்று கொண்டு அதை தன் உயிராக நினைத்து வளர்க்கின்றான்.
ஒரு கட்டத்தில் அந்த மரத்தை பாதுகாக்க தன் உயிரையும் பணையம் வைக்க தயாராகிறான். அந்த தருணத்தில் அவனை ஒரு பெண் காதலிக்க, அதை ஏற்க தயாராக இல்லாதவர் ஒரு கட்டத்தில் காதல் வயப்படுகிறான்.
சூழ்நிலை காரணமாக மிருகமாக மாறியவன் எதனால் அப்படி மாறுகிறான் என்பதே கதை. இப்படம் பற்றி ஜெய் கூறியதாவது படத்தில் நீங்கள் பார்க்கப் போகிற அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தவைதான்.
நிஜத்தில் என் காதலி பணத்துக்கு ஆசைப்பட்டு என்னை விட்டுப் பிரிந்திருந்தாலும், நான் அதை இந்த கதையில் பாசிடிவாக வைத்திருக்கிறேன். காதலின் வலியை உணர்த்துகிற கதை, அது என் சொந்தக் கதை. அதனால் உணர்வுபூர்வமாக நடித்தபோது அழ வேண்டிய காட்சிகளில் கிளிசரின் போடமலேயே அழுதேன்.
இப்படம் சென்னை, மலேசியா, ஊட்டி, திருப்பதி மற்றும் பாடல்கள் லண்டனில் ஷூட் செய்யபட்டது. இசை நந்தா, பாடல்களை இயற்றியவர் சினேகன் . போய்ஹூட்’ என்ற ஆஸ்கர் அவார்டு பெற்ற படத்தினை தழுவி தான் இப்படத்தை இயக்கியுள்ளதாக ஜெய் ஆகாஷ் கூறியுள்ளார்.
மாமரம் திரைப்படம் இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவான படமாம். நல்ல கதைக்கு எங்கள் ரசிகர்கள் என்றுமே ஆதரவு தருவார்கள் ஜெய் சார்.. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.
சோர்வடைந்து விடாதே.. வாழ்க்கை நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் ஆச்சரியமான புது அத்தியாயங்களை உருவாக்கும்.