நடிகர் காளி வெங்கட் தாயார் மறைவு
நடிகர் காளி வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் திரையுலகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் வருகிறது.
நடிகர் காளியின் தாயார் மரணம். சினிமாவின் மீது உள்ள ஆசையால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தவர் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போகவே வியாபாரம் செய்ய தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் விஜய் பிரபாகரன் கண்ணில் படவே அவருடன் இணைந்து Thasaiyinai Thee Sudinum என்ற படத்தில் நடித்தார்.
இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர்கள் குறும்படத்திலும் நடித்திருக்கிறார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களுக்கு பெயர் பெற்ற காளி வெங்கட், 2010 முதல் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கடந்த ஆண்டு மட்டும் எட்டு படங்களில் தோன்றினார், அட்லீ தயாரித்த இந்தி திரைப்படமான பேபி ஜான் படத்திலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில், காளி வெங்கட்டின் தாயார் விஜயலட்சுமி காலமானார் என்ற செய்தி வெளியானது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று தனது 72வது வயதில் காலமானார்.