விவசாயிகளுக்கு விருதை வழங்கிய நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு ஊக்க தொகையும் பரிசுகளையும் வழங்கி வருகிறார்.
பொங்கல் திருநாளை ஒட்டி சென்னையில் நடிகர் கார்த்தி விவசாயத்தில் சாதனை புரிந்த ஐந்து பேருக்கு இரண்டு லட்சம் நிதி உதவியும் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி நடிகை சரண்யா பொன்வண்ணன் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கார்த்திக் பேசுகையில் உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோரும் உற்சாக படுத்த வேண்டும் இவர்கள் தான் நாம் கொண்டாட படவேண்டியவர்கள் அதற்காக தான் உழவருக்கான விருதை வழங்கி வருகிறோம்.
விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் பலர் இவர்களைப் போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள் இதனால் உழவுத் தொழிலும் பயனடையும் பொங்கல் தினத்தில் மட்டும் உழவர்களை நினைக்காமல் எல்லா நேரங்களிலும் நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.