சபரிமலை அனுபவத்தை பகிர்ந்துகொண்ட நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி சமீபத்தில் சபரிமலை கோயிலுக்கு சென்றார். அவருடன் நடிகர் ரவி மோகன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் மற்றும் சிலர் சென்றனர்.
ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்காக மற்ற பக்தர்களுடன் வரிசையில் நின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
நேர்காணலில், கார்த்தி, சபரிமலை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “சபரிமலைக்கு வருகை தருவது இதுவே முதல் முறை, நானும் ரவி மோகன் மற்றும் நண்பர்களுடன் சென்றோம்.
மகரஜோதிக்காக மீண்டும் செல்வேன் என்று நம்புகிறேன். இந்த முறை, நான் எந்த சிறப்பு பிரார்த்தனை…இக்காக அல்லாமல் , தெய்வத்தைப் பார்க்க மட்டுமே வந்தேன் – வயதானவர்கள் முதல் இளம் குழந்தைகள் வரை அனைத்து வயதினரும் புனித யாத்திரை மேற்கொள்வதைப் பார்த்தது நெகிழ்ச்சியடைந்தேன்.
“நான் ஏன் முன்பே வரவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த முறை நான் வர வேண்டும் என்று ரவி மோகன் வற்புறுத்தினார், அதனால் சென்றேன்.
மற்ற யாத்ரீகர்களுடன் காட்டுப் பாதையில் நடிகர் கார்த்திக் நடந்து சென்றார். பல ரசிகர்கள் அவரை யாத்திரையின் போது அடையாளம் கண்டுகொண்டாலும், கார்த்தி பணிவாகவும் அமைதியாகவும் இருந்தார்.
அந்த அனுபவம் தனக்கு அமைதியையும் பலத்தையும் அளித்ததாக கார்த்தி பகிர்ந்து கொண்டார். நடிகர் ஜெயராமுடன் சேர்ந்து கோயிலுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் கார்த்தி குறிப்பிட்டார்.