நடிகர் கோதண்டராமன் மறைவு
தமிழ் படங்கலில் Stunt Master…ராக 25 ஆண்டு காலம் பணியாற்றிய கோதண்டராமன் சுந்தர். சி. இயக்கத்தில் வெளியான கலகலப்பு படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து இவர் அடிக்கும் லுட்டியை இப்போது பார்த்தாலும் நமக்கு சிரிப்பு.
கலகலப்பு படத்திற்கு பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்தவருக்கு திடிரென்று ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக நடிக்க முடியவில்லை.
இவர் இன்று காலை சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார்.
65 வயதாகும் கோதண்டராமனின் மறைவுக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கலையும் அஞ்சலையும் செலுத்தி வருகின்றனர்.