குடும்பத்துடன் பிரதமரை சந்தித்த நடிகர் நாக சைதன்யா
சந்து மொண்டேட்டி இயக்கதில் சாய் பல்லவியுடன் இணைந்து நடித்த தண்டேல் இந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் சைதன்யாவின் நடிப்பைப் பாராட்டினர்..
தாண்டில் திரைப்படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளே இந்திய அளவில் பத்து கோடியை வசூல் செய்தது படத்தின் வெற்றியை முன்னிட்டு நாக சைதன்யா தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்தார்.
நடிகை சோபிதா துலிபாலா சமீபத்தில், நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை பாராளுமன்ற கட்டிடத்தில் சந்தித்த தருணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
பத்ம பூஷன் விருது பெற்ற டாக்டர் யர்லகடா லட்சுமி பிரசாத் எழுதிய ‘அக்கினேனி கா விராட் வ்யக்தித்வா’ என்ற புத்தகத்தை இருவரும் பிரதமருக்கு வழங்கினர்.
இந்த புத்தகம் பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவின் (ANR) வாழ்க்கை மற்றும் இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றிய அழியாத பங்களிப்பை பற்றியது. நாக சைதன்யா, நாகர்ஜுனா மற்றும் அமலா ..வும் இந்த சந்திப்பின்போது உடன்னிருந்தனர்.